ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவும் இலங்கையின் பிரதமராக பணியாற்றும் திறமை கொண்டவர்கள் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தல் அரசியலில் இருந்து விலகியுள்ள மங்கள சமரவீர, தான் தேர்தல் அரசியலை விட்டு விலகியுள்ளதாகவும், சைபர் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அத தெரன நிகழ்ச் சியில் பங்கு பற்றி கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறியது குறித்து அவரிடம் கேட்டதற்கு, எதிர்க்கட்சி தனது பணியை சரியாக செய்யவில்லை என்று தான் உணர்ந்ததால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியுள்ளதாக கூறினார்.

 

 

Apekshakaya

பிந்திய செய்தி