நீர்கொழும்பு  சிறைச்சாலையின் முன்னாள் ஆணையாளருக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகள் குறித்து சிஐடியினர் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர் தனது வங்கிக் கணக்குகளில் தினமும் பெரும் தொகையை வைப்பு செய்து வருவது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சிறை அதிகாரியின் உதவியாளரால் பணம் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சிறை அதிகாரிகள் உட்பட சுமார் 40 நபர்களிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அறிக்கைகளைப் பெற்றுள்ளது.

பிந்திய செய்தி