நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் குரான் மத்ரஸாக்களை மூடுவதற்கும் புர்காவை தடை செய்வதற்கும் முஸ்லிம்களால் நடத்தப்படும் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறும் பௌத்த பிக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தேசத்தைப் பிளக்கும் ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் ஜூலை 6, திங்கட்கிழமை ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அரசாங்கத்திற்கு "முடிந்தால் அதை நிறுத்துங்கள்" என்று சவால் விடுத்தார்.

"நாங்கள் பௌத்தர்களிடமும்  கிறிஸ்தவரிடம் நாங்கள் இந்துக்களிடம் சொல்கிறோம், இந்த கொடுமைப்படுத்தும் புர்காவை நிறுத்தும் வரை நாங்கள் முஸ்லிம் கடைகளுக்கு செல்வதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அகிலஇலங்கை ஜமியத்துல் உலமா சபை என்பது இலங்கை முஸ்லிம்களுக்கு மத மற்றும் சமூக வழிகாட்டுதல்களை வழங்கும் இஸ்லாமிய அறிஞர்களின் உச்ச சபை ஆகும்.

மத்ரஸாக்களை "வெடிகுண்டு தயாரிக்கும் இடமாக சுட்டிக்காட்டும் அத்துரலிய ரத்தன தேரர், இவை "சட்டவிரோதமானவை" என்றும் கூறியுள்ளார்.

 

பிந்திய செய்தி