பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் பூச நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை  ஏற்றிச் செல்வது குறித்து அமைச்சர் மோட்டார் போக்குவரத்து ஆணை குழு  மற்றும் பொலிசாருடன் இது தொடர்பாக நீண்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

தற்போது நம் நாட்டில் உள்ள வீ திகளில் பாடசாலை மாணவர்களின் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களை கொண்டு செல்வதற்கு சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிந்திய செய்தி