வெலிக்கடை சிறைக்கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் 492 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் புனர்வாழ்வு பெற்றுவந்த 429 பேர், ஊழியர்கள் 47 பேர், தொடர்புகளை பேணிய 16 பேர் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,631 ஆக அதிகரித்துள்ளது.

பிந்திய செய்தி