கல்வி அமைச்சால் வெளிடப்படவுள்ள பரீட்சை ஒத்திவைப்பது தொடர்பான முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர்கள் அல்லது அதிபர்களின் சங்கங்களுடன் கலந்தாலோசிக்காமல் கல்வி அமைச்சு இதுபோன்ற முடிவுகளை எடுத்திருப்பதாகா நெத் நியூஸிடம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைகளை நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படுவது மாணவர்ளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கூறுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5க்கான பரீட்சை திகதி நாளை (ஜூலை 20) அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்தி