முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கங்கள் கட்சியின் தலைமையை ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த அழைப்பு கருவுக்கு விடுக்கப்பட்டிருப்பதானது மிகவும் நம்பகமான தகவலில் இருந்து உறுதிப்படுத்தப்படுகிறது

இம் முறை பொதுத் தேர்தலில் ஐ.தே.க பாரிய தோல்வியை சந்தித்த நிலையில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்ததன் மூலம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க செயற்பாட்டாளர்கள் உடனடியாக சிங்கள-பெளத்த  சமூகத்தின் அவசியத்தையும், நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமையின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர், இதற்கு கரு ஜயசூரிய மிகவும் பொருத்தமானவர் என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

தான் கட்சித் தலைமையை விட்டு விலகுவதாகவும், அதற்கு முன்னர் தலைமைக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க இரண்டாம் நிலை தலைமைகளுக்கு தெரிவித்த பின்னர், இப்போது பலர் தலைமைத்துவத்திற்கான போரில் ஈடுபட்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, நவீன் திசானாயக, தயா கமகே, அகில விராஜ் கரியவசம் மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் ஏற்கனவே ஐ.தே.க தலைமைக்கான போட்டியில் ஈடுபட்டிருப்பது ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளிவந்தது.

இத்தகைய சூழ்நிலையில், உள்கட்சி மோதல்களைத் தடுத்து கட்சியை மீண்டும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரே நபர் கரு ஜயசூரிய மட்டுமே என்று சிலர் கருதுகின்றனர்.

பிந்திய செய்தி