சமகி ஜன பலவேகயவின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம் இன்று (13) காலை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சமகி ஜன பலவேகய 07 தேசிய பட்டியல் உறுப்பினர்களை பெற்றிருந்தனர்.

சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து போட்டியிட்ட சிறு கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குரிய தேசியப்பட்டியல் உறுப்பினர்களை வழங்கப்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து தேசியப்பட்டியல்களை பெயரிடுவது தாமதமானதாக அறியக்கிடைக்கின்றது

இருப்பினும், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட தேசியப்பட்டியல் குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தார்.

அதன்படி, சமகி ஜன பலவேகயவின் தேசியப்பட்டியல் இடங்களுக்கு,

1- டயானா கமகே,

2- ரஞ்சித் மத்துமபண்டார

3- ஹரின் பெர்னாந்து,

4- இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார்,

5- திஸ்ஸ அத்தநாயக்க,

6- எரான் விக்ரமரத்ன

7- மாயந்த திசநாயக்க

ஆகியோரின் பெயர்கள் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்தி