கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் வாக்களிக்காததால் தோல்வியடைந்த மாத்தறை மாவட்டத்தை சேர்ந்த நிரோஷன் பிரேமரத்ன மற்றும் மொனராகல மாவட்டத்தைச் சேர்ந்த பத்ம உதயசாந்த ஆகிய இருவருக்கு தேசியப் பட்டியலில் இடம் வழங்கி நாடளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும் என்று  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவை சந்தித்து, தோல்வியுற்றவர்களை தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்கு அழைக்ககூடாது என்பது கொள்கை என்றாலும், இது ஒரு சிறப்பு வேண்டுகோளாக கருதப்பட வேண்டும் என்று கூறினார்.

எவ்வாறாயினும், உத்தரவாதமளிக்கப்பட்ட கொள்கைகளை மக்களின் பார்வையில் உடைப்பது, ஒரு மோசமான முன்னுதாரணமாகும், மேலும் அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை அழிக்கக்கூடும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நிரோஷனைப் போலவே உதயசாந்தவும் 2015 ல் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதிலிருந்து நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து போராடியவர்களாவர் அவர்கள் இருவரும் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களாவர் என்பது குறிப்படத்தக்கது.

Wimal Udaya

பிந்திய செய்தி