வலிமைமிக்க ஐ.தே.க க்கு என்ன நடந்தது என்பது எமக்கு தெரியும் இது மொட்டுக் கட்சிக்கும் நடக்காது என்று கூற முடியாது என வனவிலங்கு பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வனவள அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவியில் எந்தப் பிரச்சினையும் இல்லை அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்று அவர் பதியதலாவையில் இடம் பெற்ற  வரவேற்பு கூட்டம் ஒன்றில் அவர் கூறினார்.

கவலைப்பட வேண்டாம் என்று சக அமைச்சர்கள் எச்சரித்ததாகவும், எனவே எதிர்காலத்தில் பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பிந்திய செய்தி