1200 x 80 DMirror

 
 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

மூன்று பெண்களும் இரு ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை தெரிய வந்துள்ளது.

nalan mendis

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி