கொரோனா தொற்றி இறந்துவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக நாகொட வைத்தியசாலை பணியாளர்களை ஏற்றிச் செல்லும் இ.போ.ச ஓட்டுநரொருவர் நேற்று (8) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொடவுடஹேன, யட்டியன, அகலவத்தையில் வசிக்கு பீ.வீ. சரதியல் என்ற 56 வயதுடைய களுத்துறை இ.போ.ச. டிப்போவில் பணியாற்றும் ஓட்டுநரே இவ்வாறு இறந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்  சம்பவம் நடந்த இடத்திலேயே நேற்று மரணவிசாரணை நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாட்சியமளித்த இறந்தவர் மனைவி இவ்வாறு கூறினார்,” எனது கணவர் எப்போதும் காலை 5 மணிக்கே எழுந்து விடுவார். இன்று காலையில் பார்க்கும் போது கதவு திறந்திருந்தது வீட்டில் அவர் இருக்கவில்லை. அவருடைய நண்பரிடம் விசாரித்தேன், பெரிய பெற்றோரின் வீட்டிலும் விசாரித்தேன் எங்குமே அவர் போகவில்லை என்பது தெரிந்தது. எப்போதும் கொரோனா பற்றியே உளரிக் கொண்டிருப்பார். பஸ் ஓட்டுநர்களுக்கு கொரோனா தொற்றியதால் அவர் பயத்துடனேயே இருந்தார். நாளை வேலைக்குப் போக முடியாதெனவும் கூறினார். முன்பு பாடசாலை பஸ்ஸில் வேலை செய்தார். கொரோனா காரணமாக மத்துகமையிலிருந்து இந்தன்னாகொட வைத்தியசாலை பணியாளர்களை அழைத்துச் சென்றுள்ளார். பஸ்ஸில் ஒருவருக்கு கொரோனா என நேற்று தெரியவந்தது. இவர் நன்றாக பயந்திருக்கக் கூடும்”.

சம்பவம் தொடர்பில் மத்துகம தலைமை நிலைய பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம உடவத்தவின் தலைமையில் மேலதிக விசாரனைகள் நடைபெறுகின்றன.

பிந்திய செய்தி