இந்திய நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்டு 2ம் கட்ட பரிசோதனையிலுள்ள கொவிட் – 19 வைரஸ் தடுப்பூசியை இந்நாட்டில் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லீட் நிவ்ஸ் இணையத்தளம் கூறுகிறது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சியினால் சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது விடயத்தில் உலக சுகாதரா அமைப்பின் இலங்கைக்கான பிரநிதியாகக் கடமையாற்றும் இந்திய அதிகாரி நிர்ப்பந்தித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதன்படி, இலங்கை மக்களை இந்த தடுப்பூசி நல்லதாக கெட்டதா என்பதை பரிசோதிக்கப் பயன்படுத்தும் இரசாயனகூட எலிகளாக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து மருத்துவர் வசந்த பண்டார கூறுகையில், இந்த தடுப்பூசி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகத் தெரியவில்லை என்றார். அதேபோன்று, இது சம்பந்தமாக எந்தவொரு ஆய்வறிக்கையையும் பெற முடியவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

பிந்திய செய்தி