போகம்பர பழைய சிறைச்சாலைக்குள்  கொரோனா வைரஸ் தீவிரமாக இருப்பதால் தம்மையும் PCR பரிசோதனை செய்யுமாறு கோரி தடுப்புக் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தற்போது சிறைச்சாலையை அமைந்துள்ள பிரதேசத்திற்கு ஆயுதம் தரித்த பாதுகாப்புப் பிரிவினர் பெருமளவில் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று வரை (11) இந்த சிறைச்சாலையில் கொரோனா தொற்றிய 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்தி