கொரோனா தொற்று காரணமாக தற்போது மூடப்பட்டிருக்கும் கொழும்பு புறக்கோட்டை மெனிங் மார்கட்டிற்குச் சொந்தமான வர்த்தகப் பெறுமதிவாய்ந்த மிகப்பெரிய காணியை விற்கும் திட்டத்திற்கமைய  அங்கு காணி அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

வெளி மாகாணங்களிலிருந்து மெனிங் மார்கட்டிற்கு மரக்கறி வகைகள் கொண்டுவரப்படுவதை திடீரென நிறுத்திவிட்டு, வியாபாரிகள் இல்லாத நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்களுடைய காணியை பறித்து, விற்பதற்கு அரசாங்க மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள மெனிங் மார்கட் தொகுதியின் தொல்லியல் மதிப்பு வாய்ந்த கட்டிடங்களில் சுமார் 1200 கடைகள் உள்ளன. அந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு காணியை விற்பதற்கு அரசாங்கம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நடவடிக்கை எடுத்திருப்பதோடு, விமானப்படையின் உதவியுடன் காணி அளவை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேலியகொட வர்த்தகத் தொகுதிக்கு வியாபாரிகளை அனுப்புவதாகக் கூறினாலும், பேலியகொட வர்தகத் தொகுதியில் வியாபார நிலையங்கள் அரசாங்கத்தில் அதிகாரமுடையோரின் ஆதரவாளர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன. மெனிங் மார்கட் தொகுதியின் வியாபாரிகளை போகுந்தர பிரதேசத்தில் வேறு வர்த்தகத் தொகுதிக்கு விரட்டும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக மெனிங் மார்கட் வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிந்திய செய்தி