கொரோனா தொற்றின் காரணமாக மரணிகும் முஸ்லிம்களின் உடல்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்காக அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சடலங்கலை வறண்ட பிரதேசங்களில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படல் வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கிடையே, சடலங்களிலிருந்து நிலத்தடி நீருக்கு வைரஸ் செல்வதனால் உடல்களை அடக்கம் செய்வது உகந்ததல்ல என அறிவித்த பல்கலைக்க விரிவுரையாளரிடம் அது சம்பந்தமாக வினவிய போது, தான் அவ்வாறு கூறியது ஆராய்சியின் அடிப்படையில் அல்ல எனக் கூறியுள்ளார்.

சடலங்களிலிருந்து நீர் ஆதாரங்கள் ஊடாக வைரஸ் மீண்டும் மனித உடல்களுக்குத் தொற்றுமா என்பது குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அறிக்கை விட்டதை அவர் ஏற்றுக் கொண்டாலும், கொரோனா தொற்று காரணமாக மரனிக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய முடியுமென உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வுகள் சம்பந்தமான தகவல்களை சுகாதார மேலதிகாரிகள் கற்க வேண்டும்.

பிந்திய செய்தி