மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர ஏனைய பிரதேச பாடசாலைகளை இம்மாதம் 23ம் திகதி திங்கட்கிழமை திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக. இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பேராசிரியர ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளவாறு 6ம் தரத்திலிலிருந்து 13 தரம் வரை மாத்திரம் பாடசாலைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பமாகிய விதம் அல்லது பரவலாகிய விதம் சம்பந்தமாக முறையாக ஆராயாமல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதால் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையென சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆபத்தான பிராந்தியங்களென அரசாங்கம் பெயரிடும் பிரதேசங்களுக்கும் அப்பால் நோயாளர்கள் அடையாளம் காணப்படாத பிரதேசங்களில் கூட நோய்க்காவிகள் இருக்கக் கூடுமென்பதால் ஆபத்து நிலவுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிந்திய செய்தி