தற்போதைய நிலைமை காரணமாக புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களையும் ஒரே நேரத்தில் திரும்ப அழைத்து வருவது நடைமுறை சாத்தியமில்லை என்றும், அவர்கள் ஓர் ஒழுங்கு முறையில் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்றும் தொழில் அமைச்சர் நிமல்  சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட்- 19 தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பணிக்குழு மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஒத்துழைப்புடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அழைப்பது முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளால் விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளின்படி தொழிலாளர்கள் திருப்பி அழைக்கப்படுவதால், இந்தப் பணி கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இலங்கைக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதே முதன்மையான அக்கறை என்றும், அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிந்திய செய்தி