கொவிட் 19 தொற்றிய நபராக அடையாளம் காணப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருரை இரண்டாவது PCR பரிசோதனை செய்யாமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வெளிநாட்டிலிருந்து இந்நாட்டிற்கு வந்த மேற்படி நபர் கடந்த ஒக்டோபர் 13ம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தல் முகாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். 25ம் திகிதி நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி அவரை தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்திருந்து 14 நாட்களுக்குப் பின்னர் PCR பரிசோதனை செய்யாமல் வீடடிற்கு அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்த, ஹொரண பிரதேசத்தில் வசிக்கும் மேற்படி நபர் உள்ளிடட 4 குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு கூறுகிறது.

பிந்திய செய்தி