1200 x 80 DMirror

 
 

இலங்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க மகள் தனது தந்தையின் கொலைக்கு ஐ நா அமைப்பிடம் நீதி கோரி கோரியுள்ளார்.`சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி காலை பணிக்குச் செல்லும் போது இராணுவத்துடன் தொடர்புடைய கூலிப் படைகள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் உச்சக்கட்டத்திலிருந்த போது விமானப் படையினர் உக்ரைன் நாட்டிலிருந்து மிக் விமானங்களைக் கொள்வனவு செய்த விஷயத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றஞ்சாட்டி சில ஆவணங்களை வெளிப்படுத்தினார்.

நாட்டின் தற்போதைய அதிபரும், அந்த சமயத்தில் பாதுகாப்புச் செயலராகவும் இருந்த கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு எதிராக சாட்சியமளிக்கவிருந்த நிலையில் அவர் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டார்.

தனது தந்தை படுகொலை செய்யப்பட்ட 12 ஆண்டுகள் ஆனாலும் அரசு அதை விசாரிக்கவோ அல்லது அவரது கொலைக்கு காரணமாக இருந்தவர்களையோ நீதியின் முன் நிறுத்தவில்லை என்று அகிம்சா விக்ரமதுங்க ஐ நா மனித உரிமைகள் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கொ நகரைத் தளமாகக் கொண்ட நீதிக்கும் பொறுப்புக் கூறலுக்குமான மையம் அவர் சார்பில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது.

இதேவேளை தென்னாப்ரிகாவின் ஜொஹனஸ்பர்க் நகரிலிருந்து செயற்படும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் (ITJP) அவரது படுகொலை மற்றும் விசாரணை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

``லசந்த விக்ரமதுங்கவின் அச்சமற்ற அறிக்கைகள் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில்கள் வழங்கப்படவில்லை அதற்குப் பதிலாக அவரை மௌனிக்கச் செய்வதற்கு அவர் கொல்லப்பட்டார், அதேவேளை  ஏனையவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் அல்லது நாடு கடந்து வாழ நிர்பந்திக்கப்பட்டனர்`` என்று லசந்த விக்கிரமதுங்கவின் அச்சமற்ற அறிக்கைகள் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னும்

பதில்கள் வழங்கப்படவில்லை அதற்குப் பதிலாக அவரை மௌனிக்கச் செய்வதற்கு அவர்

கொல்லப்பட்டார் அதேவேளையில் ஏனையவர்கள் அச்சுறுத்தப்பட்டனர் அல்லது நாடு கடந்துவாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்” என்று ITJP அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இலங்கையினால் மிக் விமானம் கொள்வனவு செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பித்து பதின்மூன்று வருடங்களுக்குப் பின்னரும் இந்த வியாபாரத்தில் களவாடப்பட்டதாக உக்ரைன் நாட்டு வழக்கறிஞரால் கூறப்பட்ட ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்திற்கு என்ன நடந்தது என்பதற்கு இன்னமும் பதில் இல்லை என்று ITJP அறிக்கை கூறுகிறது.

மிக் விமானங்கள் வாங்கிய முறைகேட்டில் தொடர்புடையவர் என்று கருதப்படும் உதயங்க வீரதுங்க பல ஆண்டுகளாத் தலைமறைவாயிருந்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் ஒன்றுவிட்ட சகோதரரான உதயங்க தற்போது அவரது இணைப்புச் செயலராகச் செயற்படுவதாகக் கூறப்படுகிறது. 

“இந்த ஆயூத வியாபார உடன்படிக்கை பற்றி விசாரணை செய்வதில் உயிரிழந்த ஒரு மனிதருக்கு அவரைக் கொலை செய்தவர்களை நீதிக்குமுன் கொண்டுவருவதும் வரி செலுத்துபவர்களின் மில்லியன் கணக்காக பணம் எங்கே காணாமற் போனது என்பது பற்றிக் கண்டுபிடிப்பதும் நாங்கள் அவருக்குச் செய்யவேண்டிய கடமையாகும். உதயந்த வீரதுங்க தான் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை எந்தவொரு அரசாங்கப் பதவிகளையூம் வகிக்க கூடாது.” என்று யாஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.

nalan mendis

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி