1200 x 80 DMirror

 
 

P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடயம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடயங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்க்கப்பட்டது.

இதன் பின்னால் இலங்கையில் உள்ள சவுதி அரசின் தூதுவராலயம் சம்பந்தப்பட்டுள்ளது என்ற விடயம் தற்போது கசிந்துள்ளது. ஜனாசா குறித்து சாணக்கியன் பேசியதால் அவருக்கு சவுதி அரசு இலங்கை காசு 2 கோடி ரூபாவை சன்மானமாக வழங்கியுள்ளதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளது. இலங்கை துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனையத்தை, இலங்கை சில வாரங்களுக்கு முன்னர் சீனாவுக்கு தாரை வார்த்தது. அது போல யாழில் நயினா தீவிலும் சீனா காலடி வைக்க இலங்கை பச்சை கொடி காட்டியுள்ள விடயம்,  இந்தியாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதனால் இந்தியா சில தூண்டுதல்களை தமிழர்களை வைத்து செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த P2P என்று புத்தி ஜீவிகள் கருதுகிறார்கள். உதாரணமாக ஒரு விடயத்தை யோசித்து பாருங்கள். யாழில் தூபியை இடித்தார்கள் போராட்டம் வெடித்தது. ஆனால் எதுவுமே இல்லாமல் திடீரென இப்படி ஒரு போராட்டம் எங்கிருந்து வந்தது ? முன்னர் இது குறித்து எவரும் பேசவில்லை. இதில் திடீரென இந்திய வம்சாவழியினர்(மலையக மக்கள்) எப்படி இணைந்தார்கள் ? இதில் முஸ்லீம்கள் எப்படி இணைந்தார்கள் ?

ஏன் திடீரென 20 வருடமாக மலையக மக்கள் கேட்ட 1,000 ரூபா சம்பளத்தை கொடுக்க கோட்டபாய ஒத்துக் கொண்டார் தெரியுமா ? இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தான். வேறு ஒன்றுமே இல்லை.

இந்த போராட்டம் எப்படி திடீரென உச்சம் பெற்றது ? பேஸ் புக் மற்றும் ரிவீட்டரில் எப்படி எல்லை கடந்து சென்றது ? தற்போது இந்தியா மீண்டும் எங்களை பாவிக்க ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. எல்லோரும் தற்போது சுமந்திரனை துரோகி என்று கூறி.  அவர் செய்து வருகின்ற மற்றும் ஏற்கனவே செய்த தமிழ் இன துரோகங்களை பேசி வருகிறோம். ஆனால் இந்த சாணக்கியன் என்னும் MP மிகப் பெரிய இனத் துரோகியாக உருவெடுத்து வருவது யாருக்கும் தெரியவில்லை. செப்டெம்பர் மாதம் 20ம் திகதி 1990ம் ஆண்டு பிறந்த இந்த சாணக்கியனுக்கு வயது 30.

இவர் காதலித்து வருவது ஒரு சிங்கள அமைச்சரின் தங்கையை. அவரும் ஒரு சிங்களப் பெண் என்பதனை தமிழர்கள் மறந்து விட வேண்டாம். பலர் சாணக்கியன் இலங்கை பாராளுமன்றில் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்து வியந்து இருப்பீர்கள். அங்கே அப்படி பேசி விட்டு கொழும்பில் அவரால் நடமாட முடியுமா ? கோட்டாவின் துணை இல்லாமல் இலங்கையில்,  யாரால் அப்படி பேச முடியும் ? பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த சுமந்திரனாக உருவெடுக்க உள்ள சாணக்கியனை.

மேலும் தனக்கு தேவை ஏற்படும் பட்சத்தில், இந்தியா தமிழர்களை தூண்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஐயா விக்கினேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் தேசிய அதுவும் எமது உரிமைக்காக போராடும் அரசியல்வாதிகளின் கைகளையே நாம் பலப்படுத்தவேண்டும். இந்த P2P போராட்டத்தில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள், கலந்து கொண்டுள்ளார்கள். அதனால் அவர்கள் எல்லோருமே இந்திய அடி வருடிகள் அல்ல. பலர் தமிழ் உணர்வு காரணமாகவே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அது போலவே வெளிநாட்டிலும் தமிழர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதனை நாம் அடித்து கூற விரும்புகிறோம்.

அதிர்வு இணையம்

nalan mendis

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி