செப்டம்பர் 07 முதல் 10 வரை யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் நடைபெறவிருக்கும் 'எண்டர்பிரைஸ் இலங்கை' கண்காட்சிக்கு

எதிராக நீதிமன்றின் ஊடாகத் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுக் கொள்ள வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் கீழ் செயற்படும் செலசினே நிறுவனம் முயற்சிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

செலிசினே தொலைக்காட்சி நிறுவனம்   இப்போது வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் கீழ் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா!

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்பது இதுவரை இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட புரட்சிகரமான கடன் உதவி வேலைத் திட்டம் என்பதை நீங்கள்  அறிவீர்கள். வழமையாக உங்களிடமிருந்து அறவிடப்படும் வட்டியை என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்கம் செலுத்துகிறது. இலங்கையில் உருவாகும் தொழில் முனைவர்களை வலுப்படுத்தவே, அரசாங்கத்தினால் வரி செலுத்தப்படும் ஒரே கடன் உதவித் திட்டமான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனை இன்னும் விரிவாகக் கூறுவதாயின், வெறுமனனே தொழில்முனைவர்களை வலுப்படுத்தவதற்கு அப்பால் சென்று, தொழில்முனைவர்களின் கரங்களைப் பிடித்து, அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதே என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயல்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். ஜனநாயகம், நல்லிணக்கம் ஆகியவற்றின் ஊடாக அபிவிருத்தியைக் கட்டியெழுப்புவதே என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயல்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.

இந்த எதிர்பார்ப்பை மையப்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தினால் வரி செலுத்தப்படும் இந்த கடன் உதவித் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவே, இலங்கை முழுவதும் ஒரு லட்சம் தொழில்முனைவர்களை உருவாக்கும் நோக்கில், என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி ஒழுங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியின் முதல்கட்டம், இலங்கையின் வறுமை மாவட்டமாக கருதப்படும் மொணராகலையில் ஆரம்பிக்கப்பட்டது. வறுமை கோட்டின் கீழ் இருந்தாலும் தொழில்முனைவர்களாக முயற்சிப்போரின் கனவுகளை நனவாக்கும் முயற்சியாக மொணராகலையில் ஆரம்பிக்கப்பட்டது. இது வெறுமனே கனவு மட்டுமல்ல. கனவுகளை நனவாக்கும் தளமாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இருந்தது. இதன்படி மொணராகலை மாவட்டத்தில் ஏராளமான இளைஞர், யுவதிகளை தொழில்முனைவர்களாக உருவாக்க முடிந்தது.

அதன்பின்னர் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கட்சியின் இரண்டாம் கட்டம் அநுராதபுரம் நகரில் நடத்தப்பட்டது. மொணராகலையைப் போன்றே அநுராதரபுரத்தில் நடத்தப்பட்ட என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சிக்கு மக்களின் ஆதரவு பெருவாரியாக கிடைத்தது. அநுராதபுரத்திலும் ஏராளமான இளைஞர், யுவதிகள் தொழில்முனைவர்களாக உருவாக்கப்பட்டனர்.

தற்போது நாம் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சியின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்துள்ளோம். தேசியக் கண்காட்சியின் மூன்றாம் கட்டம், இம்முறை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நீண்டகால போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களை சந்திக்க என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி புதிய எதிர்பார்புக்களுடன் வருகிறது.
 
30 வருடகால போரின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டாலும், மக்களின் எதிர்பார்ப்புக்களை உயிர்பெறச் செய்யும் எந்தவொரு வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களுக்கு அதற்கான தேவையும் இருக்கவில்லை. வடக்கின் போர் வெற்றியை தெற்கில் விற்றுப் பிழைக்கும் தேவை மட்டுமே அவர்களுக்கு இருந்தது. 
இதற்குப் பதிலாக வடக்கு மக்களின் கனவுகளை நனவாக்க என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயல்திட்டம் தற்போது தயாராகி வருகிறது. நுண்கடன் படுகுழியில் இருந்து வடக்கு பெண்களை மீட்டெடுத்தைப் போலவே, அவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத, அரசாங்கத்தினால் வரி செலுத்தப்படும்  என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா செயல்திட்டத்தின் மூலம் அவர்களை வலுப்படுத்த அனைத்து பணிகளும் ஆயத்தமாகியுள்ளன. 

எந்தவொரு தருணத்திலும் தடைபடாது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு ஒப்பான, இந்தியாவுக்கான நேரடி பயணத்தை மேற்கொள்ள பலாலி விமான நிலையத்தை நிர்மாணிப்பது உள்ளிட்ட மிகப் பெரிய அபிவிருத்திப் பணிகளுக்கு ஒப்பான, என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சி செப்டம்பர் 07, 08, 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு அனைத்துப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுண்ணறிவு, பெருமை, புத்தாக்கம் ஆகிய தொனிப் பொருட்களின் கீழ் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சியின் மூன்றாவது கட்டம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது.

பிந்திய செய்தி