ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினையினை தீா்த்துக் கொள்வதற்காக அலரி மாளிகையில் இடம்பெற்ற

மிகவும் தீர்க்கமான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட  ஹட்டன் நெஷனல் வங்கியின் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ராஜபக்க்ஷகளின் ஆளா என்ற கடுமையான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு நெருக்கமான ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

தினேஷ் வீரக்கொடியை எந்த அடிப்படையில்  ரணில் - சஜித் பேச்சுவார்த்தையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்?  என்பது தொடர்பில் theleader.lkகேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். திணேஷ் வீரக்கொடியை இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது பிரதமரே என பெயர் கூற விரும்பாத அந்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தினேஷ் வீரக்கொடி சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

“எமக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய தினேஷ் வீரக்கொடி சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பிரதமரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அவருக்கு ஜனாதிபதியாகுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் கணக்கெடுப்பு அறிக்கைகளை எடுத்துக் காட்டியுள்ளார்”

“கோத்தா தோற்பது கருவிடம் மாத்திரமே - ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது” என்ற தலைப்பில் சில இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டிருப்பதும் இந்த பேச்சுவார்த்தையின் பின்னராகும்.

கரு ஜயசூரியவை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தினேஷ் வீரக்கொடி கூறியுள்ளார். அப்போது மக்கள் விடுதலை முன்னணியினதும், சிவில் அமைப்புக்களினதும் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெளிவு படுத்தியுள்ளார்.

இதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் நூற்றுக்கு 95 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமா் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவுக்கு அபேட்சகர் நியமனத்தை வழங்குவதற்கு ஆயத்தமாகியுள்ளதாகவும், ஞாயிறு அனைத்து நடவடிக்கைகளையும் முடிப்பதற்கு பிரதமர் இணங்கியுள்ளார்.  இவ்வாறிருக்கும் போது திணேஷ் வீரக்கொடி கடும் சதியினைச் செய்வதற்கு முயற்சிக்கின்றார்.

இதனால்தான் தினேஷ் வீரக்கொடி ராஜபக்ஷக்களின் அடியாளா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. சஜித் வேட்பாளராகப் போட்டியிடுவதைத் தடுப்பதே ராஜபக்ஷக்களின் முயற்சியாக உள்ளது. திணேஷ் வீரக்கொடி தெளிவாகவே செய்வது ராஜபக்ஷக்களின் கொந்தராத்துக்களையேயாகும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

பிந்திய செய்தி