தாமரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பொருளாதார ஆலோசகரும், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருமான

அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் அமெரிக்காவின் செனடர் ஜேம்ஸ் சின்ஹொபைச் சந்தித்தது சந்தேகத்திற்குரியது என ராஜபக்ஷ அரசாங்கத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

விஷேட அறிக்கையொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அமெரிக்காவின் “எக்ஸா” ஒப்பந்தம் மற்றும் “சோபா” ஒப்பந்தங்களுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் ராஜபக்ஷ முகாமைச் சேர்ந்த விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய கட்சித் தலைவர்கள் இந்த இரகசிய உறவுகள் தொடர்பில் என்ன கூறப்போகிறார்கள் என்றும் கோள்வி எழுப்பியுள்ளார்.

நிவாட் கப்ரால், அமெரிக்காவின் “ஆம்ஸ் ஸர்விசஸ்” பிரதானியைச் சந்தித்த சம்பவம் தொடர்பில் சஜின்  வாஸ் குணவர்தன மேலும் குறிப்பிடுகையில்,

“அண்மையில் நிவாட் கப்ரால் செனடல் ஜேம்ஸ் சின்ஹொப் என்ற செனடரை அமெரிக்காவில் சந்தித்துப் பேசியுள்ளார். அவர் செனட் சபையின் ஆம்ஸ் ஸர்விசஸ் குழுவின் தலைவராகும். ஆம்ஸ் ஸர்விசஸ்  குழு என்பது முழு செனட் சபையினதும், முழு அரச தாந்திர பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் மற்றும், ஏதேனும் அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்தைக் கொண்ட அந்த செனட் சபையின் குழுவாகும்.

அஜித் நிவாட் கப்ரால் அந்த ஆம்ஸ் ஸர்விசஸ் தலைவருடன்  எது சம்பந்தமாகப் பேசினார் என்பதை அஜித் நிவாட் கப்ராலிடம் கேட்க விரும்புகின்றேன். விஷேடமாக அவர் பொதுஜன பெரமுணவின் அங்கத்தவர் என்ற வகையில் அவர் அடுத்த பொது தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளார் என்பது எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும். அதே போன்று எனக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் அடுத்து இலங்கையில் பொதுஜன பெரமுணவின் அரசாங்கம் அமைந்தால் அமெரிக்காவுடன் எவ்வாறான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது என்பது தொடர்பிலேயே அவர்கள் பேசியுள்ளார்கள்.

அது நல்ல விடயம். அதனை நாம் சாதகமான வகையிலேயே பார்க்கின்றோம். காரணம் இன்று அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் நாம் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிட்டால்  இந்த உலகலாவிய பொருளாதாரத்தினுள் இப்போதிருக்கும் பிரச்சினைகளோடு முன்னேறிச் செல்ல முடியாது என்றே நான் நினைக்கின்றேன்”.

“அது எவ்வாறிருந்தாலும் தற்போதுள்ள கொள்கைக்கு அமைய எனக்குத் தெரிந்த வகையிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண இந்த எக்ஸா ஒப்பந்ததம், ஸோபா ஒப்பந்தங்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றது. எனவே இவ்வாறான நிலையினுள் அவர் சென்று இந்த செனட் சபையின் தலைவரான செனடர் ஜேம்ஸ் சின்ஹொப் உடன் என்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி நாட்டு மக்களிடத்தில் தெரிவிக்க வேண்டியது அவரது பொறுப்பாகும்.

அவர் முதலீடுகள் தொடர்பிலும் பேசப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றார்.  நான் நினைக்கின்றேன் ஆம்ஸ் ஸர்விசஸின் தலைவருடன் இலங்கை  தொடர்பான முதலீடுகள் பாதுகாப்பு மற்றும் டிபென்ஸ் ஏரியா பற்றித்தான் பேச வேண்டியுள்ளது. இனி அவ்வாறான ஒன்று இடம்பெறுமாயின் அது என்ன என்பது தொடர்பில் சரியாக தெரியப்படுத்துவது அவரது பொறுப்பு என்றே நான் நினைக்கின்றேன்.

எனவே நான் மிகவும் தயவுடன் அவரிடம் கேட்டுக் கொள்வது, உங்களது கொள்கைகள் என்ன என எமக்கு தயவு செய்து சொல்லுங்கள் என்றேயாகும்” என்றார்.

பிந்திய செய்தி