கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு இனி முன்வரமாட்டேன்  என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரலாக

பணியாற்றும் திருமதி தில்ருக்ஷி  விக்மரசிங்க சில மாதங்களுக்கு முன்னர் வலியுறுத்தியுள்ளார்.  அவர் இதனை இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலத்தில் செயற்பட்ட முறை தொடர்பில் ஒப்புக் கொண்டு அவண்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே வலியுறுத்தியுள்ளார்.

தான் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு இனி முன்வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ள அவர், அரசியல் அழுத்தங்களினால்தான் தான் அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்ததாக அந்த தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.  அந்த அனைத்துச் செயற்பாடுகள் தொடர்பில் தான் இன்று மிகவும் வேதனையடைவதாகவும், சட்டத்தை உருவாக்குவதற்கும், உடைப்பதற்கும் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவண்காட் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நேர்ந்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் மேற்கொண்ட அந்த தொலைபேசி உரையாடலின் குரல் பதிவினை நிஸ்ஸங்க சேனாதீர சிங்கப்பூரிலிருந்து தனது முகநூல் ஊடகா  வெளிப்படுத்தியுள்ளார்.அவண்காட் நிறுவனத்தின் சட்டபூர்வத் தன்மை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான தில்ருக்ஷி டயஸ்  விக்ரமசிங்கவின் உறுதிமொழி மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட அரசியல் அழுத்தம் தொடர்பான வெளிப்படுத்தல் என் தலைப்பில் அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தான் நிஸ்ஸங்க சேனாதீரவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கினால் இலங்கையின் சிறப்பான நிறுவனங்களுக்கிடையே ஒரு நிறுவனமான அவண்காட் மெரிடைம் சர்விஸஸ் நிறுவனம் சேதமடைந்தமை தொடர்பில் தான் தற்போது வேதனையடைவதாகவும், இது தொடர்பில் அறிந்திருந்தால் இந்த வழக்கை ஒருபோதும் தாக்கல் செய்திருக்க மாட்டேன் என்றும் அவர் அந்த தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் சுமார் 7500 ஆவணங்களை தான் தனிப்பட்ட ரீதியில் வாசித்ததாகவும், அதன் மூலம் நிஸ்ஸங்க சேனாதீர  தனது நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் நாட்டுக்கும் செய்த சேவைகள் இப்போது தனக்கு நன்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய குரல் பதிவு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான பிரதிபலிப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதோடு, தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ள விஜயவர்தன விகும், “அவரே இவ்வாறு கூறினால் எம்மைப் பற்றி என்ன பேச்சிருக்கு?” எனத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருந்தாலும் இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் முன்னாள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமும், தற்போதை சொலிஸிட்டர் ஜெனரலுமான தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவைத் தொடர்பு கொள்ள நாம் முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.  இதேவேளை தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவுக்கு எதிராக “ராவணா பலய” அமைப்பு மற்றும் “சிங்கலே” அமைப்பும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் நேற்று முறைப்பாடுகளைச் செய்துள்ளது.

பிந்திய செய்தி