ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் (தாமரை மொட்டு கட்சி) ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ, அவரது செயலாளர் ஊடாக கோத்தாபய ராஜபக்ஷவுக்காக தாமரை

மொட்டு சின்னத்தில்  ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப் பணத்தை நேற்று (20) வைப்புச் செய்துள்ளமை கூட்டு எதிர்கட்சியின் ஏனைய கட்சிகளை முற்றாக புறந்தள்ளும் செயல் என கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண (தாமரை மொட்டு), ஸ்ரீலங்கா பொதுன கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் கோத்தாபய ராஜபக்ஷ அந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கடந்த 11ம் திகதி பெசில் ராஜபக்ஷவினால் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஊடாக விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேச நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சித் தலைவர்களுக்கு அறிவித்திருந்த போதிலும் நேற்றைய தினம் இவ்வாறு கட்டுப் பணம் செலுத்தப்பட்டிருப்பது கூட்டணியை அமைப்பதற்கான கதைகளைப் புறந்தள்ளிவிட்டேயாகும்.

இதனடிப்படையில் கூட்டணியை அமைப்பதற்கும், மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கும் முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதன் மூலம் தாமரை மொட்டு கட்சியின் தலைவர்களால் ஏனைய கட்சிகள் புறந்தள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் நடாத்திச் செல்லப்படும் lankaleadnews.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிந்திய செய்தி