கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக  இருந்த காலத்தில் தீவிரவாத இஸ்லாமிய குழுவான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக

நம்பப்படும் முஹம்மர் ஸஹ்ரான் ஹசீம் ஒரு உளவாளியாக அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களின் சூத்திரதாரியாகக் கருதப்படும் முஹம்மது ஸஹ்ரான் ஹசீம்  உள்ளிட்ட குழுவினருக்கு நிதிப் பங்களிப்புச் செய்தது எமது அரசாங்கமே என ராஜபக்ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக இருந்த கெஹெலிய ரம்புக்வெல “ஹிரு” தொலைக்காட்சியின் பலய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மிகவும் ஆவேசமான முறையில் இதனைத் தெரிவித்தது, அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்திருந்த பிரதி அமைச்சர் நலின் பண்டாரவுடன் ஏற்பட்ட சூடான வாக்குவாதத்தின் போதாகும்.

அரசாங்கம் சம்பளம் வழங்கியது உளவாளிக்கே என்றும், அவர்களது பெயர் விபரங்களை வெளியிடுவது கடும் குற்றமாகும் என இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எவ்வாறிருந்த போதிலும் கடந்த ஜூன் 4ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல  பாராளுமன்றத்தில் கூறும்போது, ஸஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் முப்பது பேருக்கு கடந்த அரசாங்த்தினால் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.சாதாரணமாக உளவாளிகளாகக் கருதப்படுவது தீவிரவாத குழுக்களுக்கு வெளியிலிருந்து அனுப்பப்பட்டு தகவல்களைப் பெற்றுத் தருபவர்களேயாகும். சில சமயங்களில் அவ்வாறான அமைப்புக்களில் உள்ளவர்களுக்கே பணம் வழங்கப்பட்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் இடம்பெறும். எனினும் தற்கொலை தாக்குதல் அமைப்பின் தலைவர் ஒருவரை உளவாளியாகக் கருத்தி சம்பளம் வழங்கியிருப்பது பாரதூரமான நிலையாகும்.

இவ்வாறான நிலையினுள் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் பிரதி அமைச்சர் நலின் பண்டார ஆகியோர் ஹிரு தொலைக்காட்சியின் பலய நிகழ்ச்சியில் ஸஹ்ரான் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்த பகுதி எவ்வித திருத்தங்களுமின்றி கீழே தரப்படுகின்றது.

பிந்திய செய்தி