லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர் இருவரையும் காணாமலாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில்

சாட்சியமளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்டிருந்த

கட்டளையை செயற்படுத்துவதைத் தடை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் 24ம் திகதி இடைக்கால தடையுத்தரவை வழங்கிய செய்தி பிரதான ஊடகங்களில் வெளியாவதைத் தடுப்பதற்கு சில சட்டத்தரணிகள் குழு கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முக்கிய காரணமாகத் தெரிய வந்திருக்கும் விடயம், செப்தெம்பர் 27ம் திகதி யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்காக கோத்தாபயவின் சட்டத்தரணி ரொமேஷ் சில்வா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள விடயங்களாகும்.

தற்போதை பாதுகாப்பு நிலைகளின் அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ஷ யாழ் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார். நீதிமன்ற ஊடகவியாலளர்களின் கூற்றுக்கு அமைய இதன் மூலம் தெரிவிக்கப்படும் விடயம், யாழ் நீதிமன்றத்தைத் தவிற வேறு நீதிமன்றங்களில் ஆஜராக முடியும் என்பதேயாகும்.

இவரது மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வென்ஹப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோா் ஆராய்ந்தனர். இதற்கு முன்னரும் தாம் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பான வழக்குகளில் தீர்ப்புக்களை வழங்கியுள்ளதால் இந்த மனுவை விசாரணை செய்வதற்கு தான் விரும்பவில்லை என நீதிபதி வென்ஹப்புலி திறந்த நீதிமன்றத்தில்  தெரிவித்துவிட்டு வழக்கிலிருந்து விலகிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் தீபாலி விஜேசுந்தர தனியாகவே யாழ் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட சிதாசியை இடைநிறுத்தி இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதோடு இந்த மனு மீதான விசாரணையினை ஒக்டோபர் 03ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த மனு விசாரணையினை அறிக்கையிடுவதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு சில சட்டத்தரணிகள் குழு, பாதுகாப்பு போதாமை காரணமாக யாழ்ப்பானம் செல்லவில்லை என்ற விடயம் அடங்கியவாறு செய்திகளை எழுத வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.  எனினும் ஊடகவியலாளர்கள் செய்தியை உரியவாறு தமது நிறுவனங்களுக்கு அனுப்பிய போதிலும் அனேக பிரதான ஊடகங்களும், இலத்திரணியல் ஊடகங்களும் இந்தச் செய்தியை உரிய முறையில் வெளியிடவில்லை.

(ராவய)

பிந்திய செய்தி