இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது சஜித் பிரேமதாசாவுக்கா? அல்லது கோத்தாபய ராஜபக்ஷவுக்கா?  என்ற விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர்

காங்கிரஸ் கட்சியினுள் சூடான கருத்தாடல்கள் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் உள்வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தற்போது ராஜபக்ஷக்களுடன் பாராளுமன்றத்தினுள் எதிர்கட்சியில் இருந்த போதிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அக்கட்சியினுள் அவருக்கு கடும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமது கட்சியினால் இனங்காணப்பட்டுள்ள பெருந்தோட்டத் துறை தொடர்பான 32 விடயங்கள் தொடர்பில அமைச்சர்  சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார்.  இவ்விடயங்கள் தொடர்பில் குறித்த வேட்பாளர்கள் தெரிவிக்கும் பிரதிபலிப்புக்களை கவனத்தில் எடுத்த பின்னரே இ.தொ.காங்கிரஸின் தீர்மானம் இவ்வாரத்தில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்தி