நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள வேட்பாளர்களை நோக்கும் போது அமைச்சர் சஜித் பிரேமதாசா அவர்களிடையே

மிகச் சரியானவர் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  குறைபாடுகள் பல இருந்தாலும் சஜித் பிரேமதாச இந்நாட்டின் ஜனாதிபதியாவது தொடர்பில் தனக்கு தனிப்பட்ட ரீதியில் மிகுந்த மகிழ்ச்சியே  என ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

சஜித் பிரேமதாசவின் கல்வி அறிவு, தனது தந்தையிடமிருந்து பெற்ற அரசியல் அனுபவ பயிற்சிகள் போன்றவற்றினால் அவருக்கு சிறந்த ஆட்சியைக் கொண்டு செல்வதற்கு தகுதி உள்ளது என தான் நம்புவதாகவும் விக்னேஸ்வரன் இதன் போது கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் எதிரி என இதுவரை காண முடியாததால் தான் அது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், இந்நாட்டில் 75 வீதமானோர்  சிங்கள பௌத்த மக்கள் என்பதோடு வடக்கு கிழக்கு மக்களில் 85 வீதமானவர்கள் தமிழ் மக்கள் என்பதை சஜித் பிரேதாச புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச சரியான, காலத்திற்கு ஏற்ற தீா்மானத்தை மேற்கொண்டு செயற்பட்டால் வடக்கு கிழக்கு அனைத்து தமிழ் மக்களினதும் அவரால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

பிந்திய செய்தி