ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (தாமரை மொட்டு) ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும்

உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பாதகமான தீர்ப்பை வழங்கினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாக இருக்குமாறு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டு எதிர்கட்சியின் மூத்த தலைவரான திணேஸ் குணவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நீதிமன்றத்தினால் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் அதற்கு மாற்றுவழியாக ராஜபக்ஷ குடும்பத்தின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக வார இறுதி செய்திப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தாமரை மொட்டு கட்சியின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்காக தற்போது கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதோடு, அவரால் போட்டியிடுவதற்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் மாற்று வேட்பாளராக தினேஸ் குணவர்தன அல்லது சமல் ராஜபக்ஷ ஆகியோருள் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகையால் அவ்வாறு அவர்கள் சுயோட்சையாகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.

பிந்திய செய்தி