கிழக்கு மாகாண ஆளுநராகப் பணியாற்றிய எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வேட்பு மனுவைத் தாக்கல்

செய்வதற்கு தீர்மானித்தது தாமரை மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே என மிக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களிலிருந்து theleader.lk இணையத்திற்குத் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு கிடைக்கவிருக்கும் கிழக்கு மாகான முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஹிஸ்புல்லாவின் ஊடாக ஓரளவுக்கேனும் உடைப்பதே பெசில் ராஜபக்ஷவின் பிரதான நோக்கம் எனத் தெரியவருகின்றது.

பெசில் ராஜபக்ஷவினால் ஹிஸ்புல்லாவுடன் கிழக்கு மாகாண தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தோ்தலில் டம்மி வேட்பாளராகப் போடப்பட்டுள்ள ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரிபால அமரசிங்கவிடம் ஒப்படைப்பட்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறான செயற்பாட்டிற்கு ஹிஸ்புல்லாவை இணங்க வைக்கப்பட்டிருப்பது அவரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிழக்கு தனியார் பல்கலைக்கழகத்திற்கு கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆன உடன் அங்கீகாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் பின்னராகும்

பிந்திய செய்தி