ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவில்லை என்றும், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்

நடுநிலை வகிக்கத் தீர்மானித்துள்ள அவர், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், நவம்பவர் 18ம் திகதிவரைக்கும்  ஸ்ரீ.ல.சு.கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசாவை நியமித்துள்ளதாகவும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட பாராளுமன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சி தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி தொடர்பில் theleader.lk கேட்டபோதே அந்த பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவர் பதவியிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா இராஜினாமாச் செய்துவிட்டதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்றும், அது முற்றாக பொய்யான செய்தி என்றும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்தி