ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி நடுநிலை வகிப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கற் மொட்டுவுக்கு ஆதரவை வழங்குவதற்கும்

எடுத்த தீர்மானத்துடன் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இரண்டாகப் பிளவு பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அப்பிரிவினைச் சேர்ந்த சிலர்  ஸ்ரீ.ல.சு. கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதோடு, பெரும்பாலானோர் ஜனாதிபதியின் தீர்மானத்தை அங்கீகரித்து நடுநிலை வகிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர்.  எவ்வாறாயினும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்குரிய  எந்த உபகரணங்களையோ, சேவையினையோ ஜனாதிபதி தேர்தலுக்குப் பயன்படுத்தக் கூடாது என ஜனாதிபதி வழங்கிய உத்தரவை தற்போது அப்பிரிவின் அதிகாரிகள் உரியவாறு கடைபிடித்து வருகின்றனா்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலையாக இருப்பதாக அறிவித்தாலும் அவர் இரகசியமான முறையில் சஜித் பிரேமதாசாவின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருப்பதாக வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிந்திய செய்தி