ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக மாத்தரை மாவட்ட பாடசாலைகளை

மையப்படுத்தி புதுவிதமான தேர்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான பாடசாலை அதிபர்களினால் இந்த தேர்தல் செயற்பாடுகள் தமது பாடசாலைகளில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  பயங்காரவாதிகளின் அச்சம் பெற்றோர்கள், மாணவர்களிடத்தில் ஏற்படும் வகையில் காலையில் பாடசாலைக்கு வரும் பிள்ளைகளின் புத்தகப் பைகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்துதல், பாடசாலை வாசல்களில் பெற்றோர்களை நிற்கச் செய்தல் மற்றும் பயங்கரவாதிகளின் அச்சம் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக பெற்றோர்களுக்கு போலியான தகவல்களை வழங்குவது போன்றன இந்த புதுமையான தேர்தல் பிரசார தந்திரங்களாகும்.

இந்தச் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவை வழங்கும் அதிபர்கள் மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் செயற்பாடு மொட்டு கட்சியின் மாத்தரை மாவட்ட குழுவினரின் தலைமையில் மாத்தரை முன்னணி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில் ஒக்டோபர் 20ம் திகதி முதல் நவம்பர் 12ம் திகதி வரையில் மாத்தரை மாவட்ட பாடசாலைகளில் வாசல்களில் மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதனையிடுதல் மற்றும் வாசல்களில் மொட்டுக் கட்சிக்கு ஆதரவான பெற்றோர்களை நிறுத்துதல் போன்றன நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன் வதந்திகளைப் பரப்புவதற்கும்,  பொது இடங்களில் சந்தேகம் ஏற்படும் வகையில் பொதிகளை வைப்பதற்கும் மற்றொரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

பிந்திய செய்தி