ராஜபக்ஷக்கள் அரசியல் செய்தது இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களைின் அடிப்படையிலேயே என ராஜபக்ஷ அரசில்

இருந்த முக்கிய கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன கூறினார்.

“பொது பல சேனாவை எடுத்துக் கொண்டால், அதனை யார் ஆரம்பித்து?, யார் நிதி வழங்கியது?, யார் உதவி செய்தது?. அடுத்தது இனவாதம், அடிப்படைவாதம், மதவாதம் ஆகிய மூன்றையும் அடிப்படையாகக் கொண்டே நாம் அரசியல் செய்தோம். இதனால்தான் இவைகளின் பலனை நாம்  2015ம் ஆண்டில் பெற்றோம். அப்போதிலிருந்து இந்தக் கொள்கைகளை அவர்கள் இன்று வரையில் மாற்றிக் கொள்ளவில்லை....” என அவர் UTV  தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது கூறியுள்ளார்.

UTV - நீங்கள் ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து முக்கியமான பாராளுன்ற உறுப்பினர் ஒருவர் என்பதை நாம் அறிவோம். அப்போது ஊடகங்கள் கூறியதைப் போன்று நீங்கள் பாரியளவிலான டீல் கொடுக்கல் வாங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் பிரதானமாக நேரடியாக தலையீட்டினைச் செய்த ஒரு பாராளுமன்ற உறுப்பினராகும். அவ்வாறிருந்த நீங்கள் ஏன் திடீரென சஜித் பிரேமதாசாவின் மேடையில் ஏறினீர்கள்?

சஜின் - அந்தக் காலத்தில் இருந்த மாபெரும் திருடன் நான் என்றுதானே காட்டப்பட்டது. அவர்கள் இதோ இவர்தான் திருடன், இவரைப் பிடித்துக் கொள்ளுங்கள் என என்னைக் காட்டினார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த எந்தவிதமான கொடுக்கல் வாங்கள்களிலும் நான் இருக்கவில்லை. உங்களைப் போன்றவர்கள் கூறுவதைப் போன்று ஒரு டீல்களையேனும் நான் செய்திருக்கவில்லை. என்மீது தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மூன்று வழக்குகள் உள்ளன. அவற்றில் இப்போது இரண்டுதான் உள்ளது. அந்த வழக்குகளிலும் அரசின் எதுவும் சம்பந்தப்படவில்லை.

அரச நிதி, அல்லது நீங்கள் கூறும் டீல், நீங்கள் கூறும் கொடுக்கல் வாங்கள், நீங்கள் கூறும் அந்த எந்த விடயத்திற்கும் என்மீது வழக்குத் தாக்கல் செய்யவில்லை.  எனது வரலாற்றில் ராஜபக்ஷக்களுடன் 15, 17 வருடங்களாகும்.

2010ம் ஆண்டு வரையில் மஹிந்த ராஜபக்ஸ இதனை நன்றாகச் செய்து கொண்டு வந்தார். எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. 2010ம் ஆண்டின் பின்னர்தான் நான் கண்ட மாற்றம் ஏற்பட்டது. அது நாமல் ராஜபக்ஸவின் அரசியல் பிரவேசத்துடன் ஆரம்பித்த மாற்றமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியினுள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முஸ்லிம் அரசியல்வாதி உள்ளாரா? முன்னணியான ஒரு முஸ்லிம் தலைவர் இருக்கின்றாரா? என எனக்குக் கூறுங்கள். அவ்வாறு யாரும் அந்தக் கட்சியில் இல்லை.  எனவே அந்தக் கட்சிய இன்று இனவாதம், மதவாதம், அடிப்படை வாதம் ஆகியவற்றுடனேயே பயணிக்கின்றது. இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டே அவர்கள் அரசியல் செய்கின்றார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்தி