தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்த் தீர்மானித்துள்ளதாக

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் தெரிவித்தார்.  தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி இலங்கை தமிழரசுக் கட்சியாகும்.

ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (030 வவுனியாவில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அக்கட்சியின் ஆலோசகரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் மற்றும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் கூடியது.  இதன் போது ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசா முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடணத்தின் ஊடாக வடக்கு மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என கூட்டமைப்பின் தலைவர் ஆா். சம்பந்தன் சஜித் பிரேமதாசாவின் கொள்கை பிரகடணம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து தெரிவித்திருந்தார்.

மாவை சேனாதிராஜா தலைமை வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமை வகிக்கும் தமிழ் மக்கள் முன்னணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமை வகிக்கும் டெலோ அமைப்பு, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமை வகிக்கும் ப்ளொட் அமைப்பு மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் தலைமை வகிக்கும் ஈ.பி.எல்.ஆர்.எப் கட்சி போன்றன ஜனாதிபதி தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

பிந்திய செய்தி