மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம்பெற்றதோடு

, அக்கூட்டத்திற்கான முழு அனுசரணையினை வழங்கியிருப்பது, கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுவெடிப்பில் ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட முஹம்மது இபுறாஹிம்  அஹமட்டின் மாமாவுமான அலாவுதீன் ஜூவலர்ஸ் உரிமையாளர் கோடீஸ்வர வர்த்தகர் அலாவுதீனே என theleader.lk இணையத்திற்கு அறியக் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் பின்னர் அலாவுதீன் தனது மன்னாரில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதியை அழைத்துச் சென்று விருந்து வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 21 ஞாயிற்றுக் கிழமை உயிர்த்த தின நிகழ்வு ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது நாடு முழுவதிலும் ஆறு இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, குண்டுதாரிகளுக்கு குண்டுகளைத் தயாரிப்பதற்காக தனது செப்புத் தொழிற்சாலையிலிருந்து செம்புகளை வழங்கியிருந்ததும் இந்த அலாவுதீனின் மருமகனான  முஹம்மது இபுறாஹீம் இல்ஹாம் அஹமட் என்பவரே என தெரிய வந்திருந்தது.

அலாவுதீனின் ஒரே மகள் திருமணம் செய்திருப்பது முஹம்மது இபுறாஹீம் இல்ஹாம் அஹமட் என்பவரையாகும்.

பிந்திய செய்தி