றோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த 34 வயதுடைய தொன் ஷிரமந்த ஜூட் எண்டனி என்பவருக்கு ஜனாதிபதி

பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கி வந்தவர் அத்துரலிய ரத்ன தேரராகும்.

ஆயுள் தண்டவை வழங்கப்பட்டிருந்த இவ்வாறானர்களுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது  தொடர்பில்  ஜனாதிபதி  மீது  கடும் எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளதுடன்,  இந்நிலையினுள்  இவ்விடயத்திற்கு தாக்கத்தைச் செலுத்திய காரணங்களைத் தெளிவு படுத்தி ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஊடக நிறுவனங்களுக்கு விஷேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“றோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்த 34 வயதுடைய தொன் ஷிரமன் ஜூட் எண்டனி என்பவர் தொடர்பில் இருந்த நியாயமான விடயங்களை மனிதாபிமான முறையில் கவனத்திற்கொண்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமயத் தலைவர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்பினரால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு எழுத்துமூலமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்விளைஞருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்காக முக்கிய பங்கெடுத்து சிறப்பான செயற்பாடுகளைச் செய்து தேவையான தலையீடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரினால் மேற்கொள்ளப்பட்டதோடு, அவரால் இவ்விளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கவும்  வைத்துள்ளார்.

அத்துடன் ரத்ன தேரரினால் இது தொடர்பில் எழுத்து மூலமான கோரிக்கையுடன் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்தி