ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் தொழில் புரியும் சுமார் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான

இலங்கையர்களும், இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள ஆயிரக்கணக்கானவர்களும் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகக் கூறி தேர்தல் சட்டங்களை மீறி குறித்த கட்சியின் சில செயற்பாட்டாளர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக தற்போது பெரும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தேசிய தொலைக்காட்சி குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்களைக் குறிப்பிட்டுக் காட்டி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“2019ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியிலிருந்து 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த  இலங்கையர்களான இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டோர் 809பேரே என குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2018ம் ஆண்டின் நவம்பர் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கை இரட்டைப் பிரஜாவுரிமையுடையோரின் எண்ணிக்கை 723 ஆகும்.

2019ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதியிலிருந்து 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 39,553 பேர்களாகும். 2018ம் ஆண்டின் நவம்பர்  முதலாம் திகதியிலிருந்து 11ம் திகதி வரையில் இந்நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 38,325 பேர்களாகும்”

பிந்திய செய்தி