எமது நாட்டின் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை அமெரிக்காவிற்குள் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட உள்ள எம்.சீ.சீ உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய முன்வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா கூறியுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிருணிக்கா கூறியதாவது, விமல் வீரவன்ச தங்களது அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கையை முற்றாக எதிர்க்கின்றது.என்று பாராளுமன்றத்தில் கூறினார். இப்பொழுது அவர்களது அரசாங்கம் உள்ளது முடிந்தால் அதிலிருந்து விலகிக்காட்டுங்கள் என்று கூறினார்.

எமது இராணுவத்தளபதிக்கு இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையானது நாட்டிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்.எனவே எம். சீ.சீ உடன்படிக்கையை அமெரிக்காவிற்கு கிழித்தெறிந்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.

பிந்திய செய்தி