குருநாகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சரத் வீரபண்டார எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. இத்தேர்தலுக்கு அவரை வைத்தியசாலையின் நிர்வாககுழு பெயரிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சந்தர்பத்தில் வைத்திய அதிகாரி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. கருத்தடை செய்த தாய்மாருக்கு நீதி பெற்றுத் தருவதாக கூறிய வைத்தியர் இவராவார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் ஒன்றை வைத்தியசாலை நிர்வாககுழுவும் கருத்தடை சிக்கலில் சம்பத்தப்பட்ட தாய்மாரும்  ஜனாதிபதிக்கு விண்ணப்பம் ஒன்றை  அனுப்பியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

இத்தேர்தலில் இவர் போட்டியிடுவதற்கான ஏற்பாட்டை அமைச்சர் விமல் வீரவன்ச செய்து கொடுத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

வைத்தியசாலைக்குள்ளும் கருத்தடை சம்பந்தமாக பொய்யான இனவாத தகவல்களை பரப்பிய வைத்தியர் நாளை பாராளுமன்றத்திலும் இனவாதத்தை விதைப்பார் என்பதுதான் நிதர்சனம்,

  

பிந்திய செய்தி