இன்று கண்டி நகரில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஓய்வூதியக்காரர்கள் புதிய ஆண்டில் தமது ஓய்வூதியதொகையை அதிகரிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்நெடுத்தனர்.

2016 – 2019 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்றுச் சென்ற ஊழியர்களின் ஓய்வூதியங்களை 2020 இல் அரசாங்கம் அதிகரிக்கவில்லை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

ஓய்வூதியம் அதிகரிகப்படாமையினால் சுமார் 120000 ஓய்வூதியகாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர் நிறுத்தப்பட்ட தமது ஓய்வூதியத்தொகையை அதிகரித்து வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.   

பிந்திய செய்தி