பிரபல சிங்கள நடிகர் காவிங்க பெரேரா இன்று அதிகாலை 12.45 மணியளவில் தலங்கம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்ல பன்னிப்பிட்டிய வீதி செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வேளையிலே கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் காயப்பட்டவர் மீகாஹென்னவைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் சந்தேக நபர் கடுவல மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் தலங்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்தி