கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது சஜித் பிரமதாசவின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட திஸ்ஸ அத்தநாயக இம்முறை பொதுத் தேர்தலில் சமகி ஜன பலய கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டி இடுகின்றார்.

திஸ்ஸ அத்தநாயக்க பொதுத் தேர்தலில் போட்டி இடுவது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் ஆதரவும் கிடைத்துள்ளது,

வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் காரியாலயம் கடந்த 20 ம் திகதி கட்டுகஸ்தோட்ட மகியாவ எனும் இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1989 கண்டி மாவட்டம் உடுதும்பர தேர்தல் தொகுதியில் போட்டி இட்டு பாராளுமன்றம் சென்ற திஸ்ஸ அத்தநாயக தொடர்ந்து 19994,2000,2001,2004 ஆகிய காலப்பகுதிகளில் பாராளுமன்றம் சென்றார்,2010 ம் ஆண்டு  தேசிய பட்டியல் மூலமாகவும் சென்றார்

அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளதுடன். அமைச்சு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

Thissa 202.24

 

பிந்திய செய்தி