கம்பளை, கெசெல்வத்த பிரதேசத்தில் நபரொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

குறித்த நபர் நேற்று (25) இவ்வாறு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்ட நபர், கம்பளை, கெசெல்வத்த பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய திருமணமான இளம் இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்படுகிறது.´

கடந்த 14 ஆம் திகதி விடுமுறைக்கு வீடு வந்த குறித்த இராணுவ சிப்பாய் நேற்று மீண்டும் பணிக்கு திரும்ப இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

´எமக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், கணவருக்கும் எனக்கும் இடையில் இதுவரை எவ்வித தகராறும் ஏற்படவில்லை´ எனவும் உயிரிழந்த இராணுவ சிப்பாயின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்தி