அபிவிருத்தி வேளைகளில் 70% மானவைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) களே செய்து கொண்டிருந்தன அதை ராஜபக்ச அரசாங்கம் நிருத்தியுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

தற்போது நாட்டில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு NGO களை அரசாங்கம் தடை செய்துள்ளது.இதனால் அவர்கள் செய்து கொண்டிருந்த அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இதனை மாவட்ட மட்டத்தில் இருந்து நடைமுறைப்படுத்துவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் NGO க்களின் மாவட்ட செயலாளர் கே. கணேஸ்வரன் கூறுகையில் மகளிர் அபிவிருத்தி சிறுவர் மற்றும் இளைஞர் அபிவிருத்தி,மணித உரிமைகள், நிலஉரிமை மற்றும் பயிற்சி வகுப்புகள் வாழ்வாதார கொடுப்பனவுகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருப்பதாக NGO க்களின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து உள்நாட்டு மட்டும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அபிவிருத்தி வேலைகளுக்கு மில்லியன் கணக்கில் செலவிட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இக்கட்டத்தில் அரசாங்கம் அவர்களின் அபிவிருத்தி வேலைகளை நிறுத்தியுள்ளது.

இதனடிப்படையில் NGO 70% மான அபிவிருத்தி வேலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என அரச அதிபர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பிந்திய செய்தி