எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக சமகி ஜன பல வேகய கட்சி தேர்தல் திணைக்களத்திற்கு நேற்று (9) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சமகி ஜன பல வேகய எந்த சின்னத்தில் போட்டியிடப்போகின்றது என்ற கேள்விக்கு இப்போது முடிவு கிடைத்துள்ளது.

தொலைபேசி சின்னம் அபே ஜாதிக பெரமுன கட்சியுடையதாகும்.

முன்னாள்  அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிறிபதி சூரியாராய்ச்சி ஆகியோர் 2007 ம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து விலகி கட்சி ஒன்றை ஆரம்பித்தனர் அதன் பெயரே அபே ஜாதிக பெரமுன.

அக்கட்சியின் சின்னம் தொலைபேசியாகும் மங்கள சமரவீர ஐ.தே.க யுடன் இணைந்ததன் பிறகு அபே ஜாதிக பெரமுனவின் தலைவராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சேணக த சில்வா நியமிக்கப்பட்டார் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவாக அவர் செயற்பட்டார் அந்தக்கட்சியில் அவர் போட்டியிடவில்லை.

எது எப்படி இருந்த போதிலும் அபே ஜாதிக பெரமுன சஜித் பிரேமதாசவின் தலைமையின் கீழ் சமகி ஜன பல வேகயவாக உருவெடுத்துள்ளது.   

பிந்திய செய்தி