கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசர நிலைமையை கருத்திற் கொண்டு தேர்தலை பிற்போட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேர்தலை விட நாட்டு மக்களின் உயிர் முக்கியம் என அவர் தேர்தல் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அவர் இன்று 16 சமூக ஊடகங்களுக்கு செல்பி வீடியோ மூலம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் நாடு பற்றியும் நாட்டு மக்கள் பற்றியும் மிகச்சரியான முடிவை எடுக்கவும் என்றும் தேர்தலை பிற்போட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.                      

இதற்கு ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சித்தலைவர் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.   

logo

Apekshakaya

பிந்திய செய்தி