இம்முறை பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என இறுதி முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசியல் குழு இன்று 16 இரவு 7 மணிக்கு கூடி தீர்மானிக்கவுள்ளது.

அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவிருக்கும் இக்கூட்டம் கொழும்பு டாலி வீதியில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெறவிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பொதுத்தேர்தலில் மொட்டுச்சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிட மொட்டுக்கட்சித்தலைவர் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கடந்த பாராளுமன்றத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மேலும் ஒருவருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சி பொதுஜன பெரமுனவை கேட்டிருந்தது அந்தகக் கோரிக்கையை  சிறிலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளதாக தெரிய வருகின்றது.இதன் இறுதி முடிவு இன்று 16 இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

இன்று 16 இரவு 7 மணிக்கு

 

 

இன்று 16 இரவு 7 மணிக்கு

 

Apekshakaya

பிந்திய செய்தி